இறப்பு விகிதம் அதிகரிப்பு : ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனை நிறுத்தம்- உலக சுகாதார அமைப்பு


இறப்பு விகிதம் அதிகரிப்பு :  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனை நிறுத்தம்- உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 26 May 2020 4:29 AM GMT (Updated: 26 May 2020 9:05 AM GMT)

கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜெனீவா

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்னா மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இத்தாலி ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பிய போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது.

ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தேவை திடீரென அதிகரித்தது.

சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி ஆய்வுகள் செய்துவருகின்றன.

அமெரிக்காவை கொரோனா தாக்குதலில் இருந்து காக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அதிகம் தேவை என இந்தியாவிடம் கோரிக்கை வைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டலும் விடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அதிக அளவில் பெற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தினமும் சாப்பிடுகிறேன் , உங்கள் முன் நலமாக இருக்கிறேன் எனவும் அறிவித்தார் டிரம்ப். இது மொத்தமாக மருந்துகளை வாங்க மற்ற நாட்டு அரசாங்கங்களைத் தூண்டியது.

பிரேசிலின் சுகாதார அமைச்சர் லேசான  கொரோனா பாதிப்புகளுக்கு கூட சிகிச்சையளிக்க  கடந்த வாரம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் மலேரியா எதிர்ப்பு குளோரோகுயின் ஆகியவற்றைப் பயன்படுத்த பரிந்துரைத்தார்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலும் மாரடைப்பு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுப்பதால் கவனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில், லான்சட் மருத்துவ ஆய்விதழ் கடந்த வெள்ளிகிழமை வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெண்டிலேட்டர் பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

தற்போது குளோரோ குயின் , மற்றும்  இதய அரித்மியா. இரண்டு மருந்துகளும் தீவிரமான பக்க விளைவுகளை உருவாக்கக்கூடும் என்று லான்செட் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, 

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த மருந்தும் பயனளிக்கவில்லை என்று லான்செட் ஆய்வு தெரிவித்து உள்ளது. நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் 96,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரியவந்து உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்றுக்கு சாத்தியமான சிகிச்சையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை "தற்காலிகமாக" நிறுத்தியதாக உலக சுகாதார நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு மருந்தைப் பயன்படுத்துவதால் அவர்கள் இறக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு  தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  சந்திப்பில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும் போது

கொரோனா வைரஸ் தொற்றுக்கான பல சாத்தியமான சிகிச்சைகளை பரிசோதிக்க பல நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் நோயாளிகளின் ஒற்றுமை சோதனை நடத்திவருகிறது. தற்போது அந்த மருந்தைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கையாக சோதனைகளை நிறுத்தியது .

"நிறைவேற்று குழு ஒற்றுமை சோதனைக்குள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தற்காலிக இடைநிறுத்தத்தை செயல்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் பாதுகாப்பு புள்ளி விவரங்களை தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் மதிப்பாய்வு செய்கிறது.

இரண்டு மருந்துகளும் தன்னுடல் தாக்க நோய்கள் அல்லது மலேரியா நோயாளிகளுக்கு பயன்படுத்த பொதுவாக பாதுகாப்பானவை என்று கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் திங்களன்று நடந்த மாநாட்டில், உலக சுகாதார அமைப்பு ஆதரவு ஒற்றுமை சோதனை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் விளைவுகளை மட்டுமே பார்க்கிறது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பயன்படுத்தி சோதனைகளுக்கான பதிவை இடைநிறுத்துவதற்கான முடிவு ஒரு தற்காலிக நடவடிக்கை என்று கூறினார்.

நாங்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படுகிறோம் என அவசரநிலை தலைவர் மைக்கேல் ரியான் ஒப்புக்கொண்டார்.

Next Story