கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை


கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 May 2020 9:37 AM GMT (Updated: 26 May 2020 12:48 PM GMT)

கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் என வவ்வால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பெய்ஜிங்

சீனாவில் வவ்வால்கள் குறித்து  நெடிய பல ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர் பெண்மணி உலக நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையை முதன் முறையாக கோரியுள்ளார்.

சீனாவின் உகான் நகரில் கடல் உணவு  சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் விலங்கிலிருந்துதான் மனிதருக்குப் பரவியிருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் சீனா அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை. ஆனால் உகான் ஆயவகத்தில் இருந்து தான் கொரோனா பரவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா உண்மையை மறைப்பதாகவும்அதற்கான விசாரணையையும்  அமெரிக்கா நடத்தி வருகிறது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கொரோனாவாக கோரதாண்டவம் ஆடி வருகிறது. 

உகானில் வவ்வால் பெண்மணி என அறியப்படும் ஷி ஜெங்லி என்ற பிரபல வைரஸ் ஆய்வாளரே  முதன் முதலில் கொரோனா  வைரஸ்  மரபணுக்களை வரிசைப்படுத்தி, தீர்வையும் வெளியிட்டவர்.இவரே சீனாவின் வவ்வால் குகைகளில் மறைந்திருக்கும் சார்ஸ் போன்ற கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர்.  

அது மட்டுமின்றி, உகான் நகரில் கொரோனா பரவிய தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.தொடர்ந்து மூன்றே நாட்களில் அதன் மரபணுவை வரிசைப்படுத்தி, கொரோனாவுக்கான தீர்வையும் கண்டறிந்துள்ளார்.

ஆனால் சீனா நிர்வாகம் இந்த தகவலை அறிந்து, அவரை மிரட்டி தங்களுக்கு சாதகமாக அவரை பணிய வைத்துள்ளது.

ஆய்வாளர் ஷி கண்டறிந்த தகவல்களை சீனா உரிய காலத்தில் வெளிப்படுத்தியிருந்தால் கொரோனா பரவலை தடுத்திருக்க முடியும் என்பது மட்டுமின்றி, மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.

ஷி தற்போது வெளியிட்டுள்ள தகவல்களில் எதிர் காலத்திலும் உலக நாடுகள் ஏதும் பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிச்சமிட்டு உள்ளார்.

தற்போது உலக நாடுகளை கடுமையாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் என்பது வெறும் ஒரு பனிப்பறையின் முனை மட்டுமே எனவும், இன்னும் சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும்.

இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து எதிர்காலத்தில் தப்பித்துக் கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அறிவியல் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவது உண்மையில் மிகவும் வருந்தத்தக்கது என குறிப்பிட்டுள்ள அவர்,வைரஸ்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கங்களும் விஞ்ஞானிகளும் தங்கள் கண்டுபிடிப்புகளுடன் வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் போன்று அடுத்த தொற்று நோய் பரவலால் மனித இனம் பாதிக்கப்படுவதைத் தடுக்க நாம் விரும்பினால்,இயற்கையில் காட்டு விலங்குகளால் பரப்பப்படும் இந்த அறியப்படாத வைரஸ்களைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க வேண்டும் என கூறி உள்ளார்.இதுபோன்ற விலங்குகள் தொடர்பில் நாம் ஆய்வு செய்ய தவறினால், கொரோனா வைரஸ் பரவலை விடவும் கொடிய ஒன்று எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது என்றார்.


Next Story