ரஷ்யாவில் புதிதாக 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ரஷ்யாவில் புதிதாக 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 May 2020 1:22 PM GMT (Updated: 26 May 2020 1:22 PM GMT)

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோ, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 56,13,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,48,479 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  

கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். ரஷ்ய அரசாங்கம் பலி எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக சுகாதார நிபுணர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,62,342 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 174 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 3,807 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 1,31,129 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (17,06,464 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (3,76,669 பேர்) உள்ளன.


Next Story