ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு


ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு
x
தினத்தந்தி 27 May 2020 10:30 PM GMT (Updated: 27 May 2020 8:58 PM GMT)

ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

வாஷிங்டன், 

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலீபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அங்கு அமெரிக்காவின் படைவீரர்கள் அதிக அளவில் தங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தலீபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது படையை படிப்படியாக குறைக்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது. அதன்படி வருகிற ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்து இருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜோனத்தான் ஹோப்மேன் கூறும்போது “தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜூலை மாதத்தில் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக குறைக்க உள்ளோம். மேலும் ஒப்பந்தத்தின் முக்கிய சரத்து ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகளை வாபஸ் பெறுவது தான். ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்து, நேட்டோ கூட்டணி நாடுகளின் ஒத்துழைப்புடன் ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் படைகுறைப்பு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

Next Story