பிரான்ஸ் நாட்டில் மதுக்கடைகள், உணவுகடைகள் மீண்டும் திறக்கப்படும் - அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு


பிரான்ஸ் நாட்டில் மதுக்கடைகள், உணவுகடைகள் மீண்டும் திறக்கப்படும் - அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 May 2020 9:45 PM GMT (Updated: 29 May 2020 8:39 PM GMT)

பிரான்ஸ் நாட்டில் மதுக்கடைகள், உணவுகடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவித்துள்ளார்.


* கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை பயன்படுத்தி, குழந்தைகளை பாலியல் ரீதியில் குற்றவாளிகள் குறிவைத்து பயன்படுத்துவதாக உலகம் முழுவதும் உள்ள போலீஸ் படைகள் தெரிவித்துள்ளன. ஊரடங்கால் ஆபாச படங்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதை பி.பி.சி. தரவு காட்டுகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆபாச படங்கள், தகவல்கள் இரு மடங்காகி 40 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டி இருப்பதாக அது தெரிவிக்கிறது.

* மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது பிரிபூமிபெர்சாட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முகைதீன் யாசின் அரசுக்கு ஆதரவு அளிக்க மறுத்த 4 எம்.பி.க்களும் அவருடன் நீக்கப்பட்டுள்ளனர்.

* தென் கொரிய நட்சத்திர ஜோடியான லீ டாங், ஜோ யோன்ஹீ இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டு கால திருமண வாழ்க்கை அவர்களுக்கு கசந்து விட்டது. இதன்காரணமாக அவர்கள் பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

* பிரான்ஸ் நாட்டில் மதுக்கடைகள், உணவுகடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவித்துள்ளார். 100 கி.மீ. தொலைவுக்கு அதிகமான பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்படுகிறது.

* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒரு டாக்டரும், நர்சும் தாங்கள் வேலை செய்து வருகிற ஆஸ்பத்திரியில் திருமணம் செய்து கொண்டனர். ஜான் டிப்பிங், அன்னாளன் நவரத்னம் என்ற இந்த புதிய ஜோடியை அங்குள்ள சக டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் வாழ்த்தினர்.

Next Story