உலக செய்திகள்

சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுகிறது: இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எதிர்ப்பு + "||" + China's defense law violates international obligations: UK, US, Canada, Australia protest

சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுகிறது: இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எதிர்ப்பு

சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுகிறது: இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எதிர்ப்பு
ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுவதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
லண்டன், 

ஹாங்காங்கில் சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த முடிவு எடுத்து உள்ளது. இதற்கான மசோதா, ஹாங்காங் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக அங்கு பொதுமக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த மசோதா, ஹாங்காங்கின் சுயாட்சிக்கு எதிரானது என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில் அந்த நாடுகள், “ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சீனாவின் முடிவானது, சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டதும், ஐ.நா. சபை பதிவு செய்ததுமான சீன, இங்கிலாந்து கூட்டு பிரகடனத்தின் கொள்கைகளின்கீழ் சர்வதேச கடமைகளை மீறுவதாக அமைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டம், ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் என்னும் கட்டமைப்பை குறைப்பதாகும் என்றும் கூறி உள்ளன.

இதற்கிடையே இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் நிருபர்களிடம் பேசுகையில், “ஹாங்காங்கில் சீனா தனது புதிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அங்கு இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் உரிமைகளை சுற்றி, இங்கிலாந்து தனது விதிமுறைகளை மாற்றி விடும். இது இங்கிலாந்து குடியுரிமைக்கு ஒரு பாதையை ஏற்படுத்தும்” என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் எதிரொலி; ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடை
ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்ட விவகாரத்தில், அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. இது தொடர்பான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
2. சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை
இந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.
3. சீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்
சீனா உடனான எல்லைத்தகராறு தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய ராணுவம் கூடுதல் வலுப்பெறும் என கருதப்படுகிறது.
4. கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்
கல்வான் பள்ளதாக்கு மோதலில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் தான் என முதல் முறையாக சீனா ஒப்பு கொண்டு உள்ளது.
5. சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சி
சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.