கொரோனா செய்த வியப்பு: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!


கொரோனா செய்த வியப்பு: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!
x
தினத்தந்தி 30 May 2020 12:46 PM GMT (Updated: 30 May 2020 12:46 PM GMT)

எகிப்து நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து நோயாளி ஒருவர் கரம்பிடித்துள்ளார்.

எகிப்து,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் எகிப்து நாட்டில் அரங்கேறிய காதல் உலகில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முகமது பாமி என்பவர் கொரோனா நோய் தொற்றால் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சிகிச்சை பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதனையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முகமது பாமி மோதிரம் அணிந்து ஆயிஷாவிடம் காதலை வெளிப்படுத்தினார். இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காமல் அவரது காதலை ஆயிஷாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது அதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story