அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்


அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 31 May 2020 2:02 AM GMT (Updated: 31 May 2020 2:02 AM GMT)

கருப்பினத்தவர் கொலை அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைகிறது. போராட்டகாரரகள் மீது கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடைபெற்று வரும்போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ்  நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும்,
அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வெத்து கூச்சலுடனும் முழக்கங்களும் மட்டும் எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.மின்னபொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம்  தற்போது நியூயார்க், டெட்ராய்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், ஆஸ்டின் மற்றும் போர்ட்லேண்ட் உள்பட பல பகுதிகளுக்கு பரவி உள்ளது.

Next Story