கொரோனாபாதிப்பு உலக அளவில் 61 லட்சத்தை தாண்டியது; இறப்பு 3.70 லட்சம்


கொரோனாபாதிப்பு உலக அளவில் 61 லட்சத்தை தாண்டியது; இறப்பு 3.70 லட்சம்
x
தினத்தந்தி 31 May 2020 2:48 AM GMT (Updated: 31 May 2020 2:48 AM GMT)

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்து உள்ளது.


வாஷிங்டன்

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்து உள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 27,34,548 ஆக உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,70,870 ஆக அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 300 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால் அங்கு வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றினால் ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததால் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் அங்கு மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரும் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நியூயார்க் பகுதியில் மரணிப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால் பெரிய அளவிலான கூட்டங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே அமெரிக்க - தென்கொரிய கூட்டுப்படைகளுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



Next Story