உலக செய்திகள்

கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம் + "||" + George Floyd protests spread far and wide; at least 25 US cities impose curfew

கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம்

கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம்
போலீசாரால் கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு கலவரம் பரவி உள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை முக்கியமான 25 நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான நகரங்களில் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளதுடன், போலீஸ் வாகனங்கள், கட்டிடங்கள் என ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.கலவரங்களை கட்டுப்படுத்த இந்த நகரங்களில் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவந்துள்ளதுடன், ராணுவமும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1992 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு கலவரத்திற்கு பின்னர் தற்போது தேசிய பாதுகாப்பு படையினரை களமிறக்கியுள்ளனர்.மட்டுமின்றி மாகாண ஆளுநர் கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

மொத்தம் 11 மாகாணங்களும், கொலம்பியா மாவட்டமும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் தேசிய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு படையினரின் உதவிக்கு அழைப்பு விடுக்கும் மாகாணங்களில் கலிபோர்னியா, ஜார்ஜியா, மினசோட்டா, மிசோரி, நெவாடா, ஓஹியோ, டென்னசி, டெக்சாஸ், உட்டா மற்றும் வாஷிங்டன் மாகாணமும் அடங்கும்.இதனிடையே உத்தரவு பிறப்பிக்கப்படும் 4 மணி நேரத்தில் ராணுவம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் தயார் நிலையில் இருக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பல கலவரத்திற்கு இலக்காகியுள்ளன.