ஈரான் நாட்டில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் வேலைக்கு திரும்பிய அரசு ஊழியர்கள்


ஈரான் நாட்டில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர்  வேலைக்கு திரும்பிய அரசு ஊழியர்கள்
x
தினத்தந்தி 1 Jun 2020 7:04 PM GMT (Updated: 1 Jun 2020 7:04 PM GMT)

ஈரான் நாட்டில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் அரசு ஊழியர்கள் வேலைக்கு திரும்பி உள்ளனர்.

* நாசா விண்வெளி வீரர்கள் டக் ஹர்லி, பாப் பெஹன்கென் ஆகியோர், அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் டிராகன் விண்வெளி ஓடத்தில் பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டனர். அவர்கள் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நேற்று முன்தினம் வெற்றிகரமாக போய் சேர்ந்தனர். அவர்களை அங்கு ஏற்கனவே உள்ள நாசா விண்வெளி வீரர் கிறிஸ் கேசிடி, ரஷிய வீரர்கள் அனடாலி இவானிஷின், இவன் வேக்னர் வரவேற்றனர்.

* கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள பெல்ஜியம் இளவரசர் ஜோசிம் (வயது 28), ஸ்பெயினில் ஊரடங்கு விதிமுறை மீறி நடந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

* இங்கிலாந்து நாட்டில் கொரோனா பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்றே தளர்த்தப்பட்டு நேற்று அமலுக்கு வந்தன. தொடக்கப்பள்ளிகள் திறந்தன. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில்தான் வைத்திருப்பார்கள் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் சாலையோர குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

* கனடாவில் கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், வெளிநாடுகளில் சிறப்பு அயல்பணிகளில் உள்ள படை வீரர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பலன்களை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது கடமையின் அபாயகரமான தன்மையை கருத்தில் கொண்டு கனடா அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.

* ஈரான் நாட்டில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் அரசு ஊழியர்கள் வேலைக்கு திரும்பி உள்ளனர். அங்குள்ள மசூதிகள் விரைவில் திறக்கப்படும் எனஅதிபர் ஹசன் ரூஹானி அறிவித்துள்ளார்.

© 2020 All Rights Reserved. Powered by Summit

Next Story