உலக செய்திகள்

சூரிய மண்டலத்திற்குள் நுழையும் 900 அடி பனிப்பாறை + "||" + Oumuamua May Be A Hydrogen Iceberg

சூரிய மண்டலத்திற்குள் நுழையும் 900 அடி பனிப்பாறை

சூரிய மண்டலத்திற்குள் நுழையும் 900 அடி  பனிப்பாறை
விண்வெளியில் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிகாகோ

பூமியின் சூரிய மண்டலத்தை கடந்து செல்லும் முதல் அறியப்பட்ட விண் பொருளான ஓமுவாமுவா பல பெயர்களில் அழைக்கப்படுகிறது ஒரு வால்மீன், ஒரு சிறுகோள், சுருட்டு வடிவ விண்கலம் என குறிப்பிடப்படுகிறது.

இப்போது இது ஒரு புதிய விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் இது ஒரு ஹைட்ரஜன் பனிப்பாறை என்று கூறுகிறார்கள்.

ஒமுவாமுவா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்பாறையில் ஹைட்ரஜன் வாயு நிரம்பியிருப்பதாகக் கூறியுள்ள ஆய்வாளர்கள், இயற்கையில் இது மிகவும் அரிதான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒமூவாமூவா பனிப்பாறை தற்போது சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இதுபோன்ற ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள பனிப்பாறை அதனைக் கடந்து செல்ல 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர். பனிப்பாறையின் கிராபிக்ஸ் படத்தையும் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. நிலவில் சுரங்கம் தோண்டி வளங்களை எடுக்க நாசா தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு
சந்திரனில் சுரங்கம் தோண்டி வளங்களை எடுக்க நாசா தனியார் நிறுவனங்களைத் தேடுகிறது,விண்வெளி வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது.
2. வேற்றுகிரகவாசிகள் உள்ளார்களா...? எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை... ஆஸ்திரேலியா வானியலாளர்கள்!!
வேற்றுகிரகவாசிகள் உள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என ஒருகோடி நட்சத்திரங்களை ஆராய்ந்த ஆஸ்திரேலியா வானியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
3. மேற்பரப்பில் திரவம், நீர், ஆக்ஸிஜன் இல்லாமல் கூட துருப்பிடிக்கும் சந்திரன் - விஞ்ஞானிகள் ஆச்சரியம்
மேற்பரப்பில் திரவம், நீர், ஆக்ஸிஜன் இல்லாமல் கூட சந்திரன் துருப்பிடித்து வருகிறது ஆய்வில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
4. இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம்
சூரியனை இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
5. ரஷியாவுடன் பனிப்போர் : விண்வெளியில் அணு ஆயுதத்தை வெடிக்க செய்ய திட்டமிட்டஅமெரிக்கா...!
நிலவை பிடிக்க பனிப்போர்: ரஷியாவை முறியடிக்க விண்வெளியில்,அணுஆயுதத்தை வெடிக்க செய்ய திட்ட மிட்ட அமெரிக்கா...!

ஆசிரியரின் தேர்வுகள்...