பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கொரோனா விதிமீறல்: தலைமை நீதிபதி ஆவேசம்


பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கொரோனா விதிமீறல்: தலைமை நீதிபதி ஆவேசம்
x
தினத்தந்தி 2 Jun 2020 9:45 PM GMT (Updated: 2 Jun 2020 8:33 PM GMT)

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் கொரோனா விதிமீறல் காரணமாக, தலைமை நீதிபதி ஆவேசமடைந்தார்.

இஸ்லாபாத், 

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையில் 5 நீதிபதிகள் அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது கோர்ட்டில் வக்கீல்கள், வழக்குதாரர்கள், ஊடகத்தினர், பொதுமக்கள் என கூட்டம் நிரம்பி வழிந்தது. யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. இதைக்கண்ட தலைமை நீதிபதி குல்சார் அகமது ஆவேசம் அடைந்தார். அவர், “சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை என்ன ஆயிற்று? நீங்கள் எல்லாம் யார்? எதற்காக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? இந்த கோர்ட்டில் விபரீதமாக எதுவும் நடக்க நான் விரும்பவில்லை. சமூக இடைவெளியை பின்பற்ற கவனம் செலுத்துங்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்” என கூறியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Next Story