இத்தாலியில் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்


இத்தாலியில் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
x
தினத்தந்தி 3 Jun 2020 10:27 PM GMT (Updated: 3 Jun 2020 10:27 PM GMT)

இத்தாலியில் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

* ஐரோப்பாவுக்கான எல்லையை இத்தாலி திறந்து விட்டது. எந்தவொரு தனிமைப்படுத்தலும் இல்லாமல் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் பயணிகள் நேற்று முதல் இத்தாலிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இத்தாலியில் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

* ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து அந்த நாட்டின் அதிபர் அஷரப் கானியும், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினர்.

* தென்கொரியாவில் அமெரிக்க ராணுவ தளங்களில் பணியமர்த்தப்பட்டிருந்த கொரியர்களின் சம்பளத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டு விட்டது. இதையடுத்து கொரியர்கள், இந்த மாத மத்தியில் பணிக்கு திரும்புவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ஈரானை சேர்ந்த விஞ்ஞானி போராசிரியர் சிரஸ் அஸ்கரி, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து ஆராய்ச்சி ரகசியங்களை வியாபாரம் செய்ய முயன்றதாக 2016-ல் குற்றம் சுமத்தப்பட்டது. இப்போது அவர் ஈரானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் ஈரான் திரும்பிக்கொண்டிருப்பதாக அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷெரீப் தெரிவித்தார்.

* நைஜீரியாவில் 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒவாவேரா ஒமசுவா கற்பழித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவத்துக்கு அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story