உலக செய்திகள்

சீனாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 39 பேருக்கு கத்தி குத்து + "||" + 39 Students, Teachers Stabbed In China School, Says State Media: Report

சீனாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 39 பேருக்கு கத்தி குத்து

சீனாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 39 பேருக்கு கத்தி குத்து
சீனாவின் தொடக்கபள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 39 பேருக்கு கத்தி குத்து காயம் ஏற்பட்டு உள்ளது.
பெய்ஜிங்: 

சீனாவில் ஒரு தொடக்கப் பள்ளியின் சுமார் 40 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்புக் காவலரால் குத்தப்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் மாகாணத்தில் உள்ள  வுஷோவின் வாங்ஃபு உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் நடந்த  கத்தி தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட முப்பத்தொன்பது பேர் காயமடைந்தனர்.

உள்ளூர் அரசு வெளியிட்ட அவசர அறிக்கையில், எட்டு ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் லி சியாமின்  ( வயது 50) பள்ளியின் பாதுகாவலர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளார். போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் சிறு காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் . காயங்கள் எதுவும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் - பிபின் ராவத்
சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
2. சீனாவுடன் தேவை ஏற்படும் போது தொழில் போட்டி தொடரும் - அமெரிக்கா
சீனாவுடன் தேவை ஏற்படும் போது தொழில் போட்டி தொடரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
3. இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
4. ஒரே முறை செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசிக்கு சீனா நிபந்தனைகளுடன் அனுமதி
உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்துள்ளன.
5. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம்
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை தரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.