உலக செய்திகள்

கொல்லப்படுவதற்கு முன்னர் ஜார்ஜ் பிளாயிட்டுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது!! + "||" + Final autopsy report reveals George Floyd had CORONAVIRUS but died from cardiopulmonary arrest

கொல்லப்படுவதற்கு முன்னர் ஜார்ஜ் பிளாயிட்டுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது!!

கொல்லப்படுவதற்கு முன்னர் ஜார்ஜ் பிளாயிட்டுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது!!
ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்

அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், மினியாபொலிஸ் நகரில் போலீசார் பிடியில் கடந்த 25-ந் தேதி கொலை செய்யப்பட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலையில் நீதி கோரி கருப்பர் இன மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்குகளையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி தொடர்ந்து 8-வது நாளாக போராடி வருகின்றனர்.

இந்த சூழலில் ஜார்ஜின் முழுமையான பிரேத பரிசோதனை முடிவுகளை அவர் குடும்பத்தார் சம்மதத்துடன் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் ஜார்ஜ் கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் தோள்பட்டை, முகம், கைகள், கால்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பான 20 பக்க அறிக்கையை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரிய அமெரிக்க தூதர்
வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரினார்.
2. கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி
கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? என்ற சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீருடன் பேட்டி அளித்து உள்ளார்.