சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் குண்டு வீச்சு
சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தபின்னர் முதல்முறையாக, சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டன.
டமாஸ்கஸ்,
சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது. இந்தப் போரில் இதுவரை 3 லட்சத்து 80 அயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் பாதிப்பேர் இடம் பெயர்ந்து விட்டனர். ஆனாலும் தொடர்ந்து 10-வது ஆண்டாக இந்த போர் நீடித்து வந்தது. அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் ரஷியா அவ்வப்போது குண்டுவீச்சு நடத்தி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தபின்னர் முதல்முறையாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் முக்கிய பகுதியான ஹமா, இத்லிப், லடாகியா மாகாணங்கள் சந்திக்கும் ஒரு பகுதி மீது 3-ந் தேதி அதிகாலை வரை ரஷிய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுவீச்சில் ஈடுபட்டன.
இந்த தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் அந்தப்பகுதியில் உள்ள எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கூறும்போது, “ ரஷியா தாக்குதலின் காரணமாக அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வடக்கே உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டன” என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story