உலக செய்திகள்

கருப்பின போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த டிரம்ப்பின் மகள் + "||" + Donald Trump's Daughter Tiffany Protests Black Man's Killing On Social Media

கருப்பின போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த டிரம்ப்பின் மகள்

கருப்பின போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த டிரம்ப்பின் மகள்
அமெரிக்காவில் நடைபெறும் கருப்பின போராட்டத்திற்கு டிரம்ப்பின் மகள் தனது முழுமையான ஆதரவை தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவில் உயிரிழந்த கருப்பினத்தவருக்காக நடக்கும் போராட்டத்திற்கு, டிரம்ப்பின் மகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், இதை விட டிரம்பிற்கு வேறு அசிங்கம் தேவையில்லை என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த 25-ந் தேதி கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.இதற்கிடையில், ஜனாதிபதி டிரம்ப், நேரத்தை வீணடிக்காதீர்கள். போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள், இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள் என்று கூறினார். டிரம்பின் இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

டிரம்ப் ஒரு புறம் இப்படி பேசிக் கொண்டிருக்க, டிரம்பின் 2-வது மனைவியான மார்லா மேப்பிள்ஸின் மகள் டிப்பனி (26) இந்த போராட்டத்துக்கு தன்னுடைய முழுமையான ஆதரவை தந்துள்ளார்.

கலவரத்தையும், கொள்ளையையும் நிறுத்த நான் இராணுவத்தை இறக்க போகிறேன், ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தும், அவரது மகள் இதை எல்லாம் உதாசீனப்படுத்தி உள்ளார்.

சமூகவலைத்தளங்களில் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு ஆதரவாக #blackoutTTuesday # #justiceforgeorgefloyd என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த டிரெண்டை ஆதரிப்பதற்காக ஒரு கருப்பு நிற போட்டோவை நேற்று ஷேர் செய்து வந்துள்ளனர் இந்த கருப்பு படத்தைதான் இன்ஸ்டாகிராம், மற்றும் டுவிட்டரில் டிப்பனி பதிவிட்டுள்ளார்.