இந்தியா, சீனா நாடுகளில் அதிக சோதனைகள் செய்தால்,கொரோனா பாதிப்புகள் அதிகம் இருக்கும்- டிரம்ப்


இந்தியா, சீனா நாடுகளில் அதிக சோதனைகள் செய்தால்,கொரோனா பாதிப்புகள் அதிகம் இருக்கும்- டிரம்ப்
x
தினத்தந்தி 6 Jun 2020 6:29 AM GMT (Updated: 6 Jun 2020 6:29 AM GMT)

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டால் அமெரிக்காவை விட கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகம் இருக்கும். என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.

வாஷிங்டன்

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத்தின் தகவல் அமெரிக்கா கிட்டத்தட்ட 19 லட்சம் கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,09,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் இந்தியா மற்றும் சீனாவில் மொத்த கொரோனா வைரஸ் பாட்திப்புகள் முறையே 2,36,184 மற்றும் 84,177 ஆக உள்ளன.

இந்தியா இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்தியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டால் அமெரிக்காவை விட கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகம் இருக்கும். அமெரிக்கா 2 கோடி பரிசோதனைகளை நடத்தி உள்ளது.

அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, ஜெர்மனி 40 லட்சம் பரிசோனைகளை செய்து உள்ளது, தென் கொரியா 30 லட்சம்  சோதனைகள் செய்துள்ளது.

விரைவான சோதனைக்கு முக்கியத்துவம் வாய்ந்த உயர்தர மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே உற்பத்தியாளர்களில் பியூரிட்டனும் ஒருவர்.

உங்கள் சாத்தியமாக்கும் சோதனைத் திறனுக்கு நன்றி, யாரும் சாத்தியமில்லை என்று நினைத்ததைப் போல நமது பொருளாதாரம் மீண்டு வருகிறது என கூறினார்.

Next Story