ஜெர்மனியில் உள்ள அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற டிரம்ப் முடிவு


ஜெர்மனியில் உள்ள அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற டிரம்ப் முடிவு
x
தினத்தந்தி 7 Jun 2020 10:34 PM GMT (Updated: 7 Jun 2020 10:34 PM GMT)

ஜெர்மனியில் உள்ள 9 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்



•அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தால் தூண்டப்பட்ட போராட்டங்கள் லண்டன், மான்செஸ்டர், கார்டிப், லீசெஸடர் மற்றும் ஷெபீல்ட் நகரங்களில் நடந்தன. லண்டன் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மண்டியிட்டு அமைதி காத்தனர். அதன் பின்னர் கருப்பு இன மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, கருப்பின மக்களுக்கு வாழ்க்கை பிரச்சினைக்குரியதாகி இருக்கிறது என கோஷங்களை முழங்கினர். மாலையில் பிரதமர் வசிக்கும் டவுனிங் வீதியிலும் போராட்டம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

•அமெரிக்காவில் நியுயார்க் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் 75 வயதான போராட்டக்காரர் மார்டின் குகினோ என்பவர் போலீசார் தள்ளியதில் கீழே விழுந்து ரத்தம் சிந்தினார். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆரோன் டோர்பல்ஸ்கி, ராபர்ட் மெக்கேப் என்னும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

•சிங்கப்பூரில் 41 வயதான சீனர், கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்றார். குணம் அடைந்து வீட்டுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டு 2 வாரங்கள் ஆன நிலையில் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் நுரையீரல் பாதித்து அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

•ஜெர்மனியில் உள்ள 9 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஜெர்மனி வருத்தம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவுடனான ஜெர்மனியின் உறவு சிக்கலானது” என கூறி உள்ளார்.

•ஆஸ்திரேலியாவில் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்துக்கு வடக்கில் உள்ள கடற்கரையில் 60 வயதான ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை 3 மீட்டர் நீளமுள்ள சுறா தாக்கியது. சுறாவுடன் போராடிய அவர் மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

•ஆப்பிரிக்க நாடான மாலியில் மோதல்கள் நடந்து வந்த ஒரு பகுதியில், ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

•கொரோனா வைரஸ் பரவலைத்தடுக்க மற்ற நாடுகளைப் போல சுவீடனில் ஊரடங்கு போடப்படவில்லை. பொது முடக்கம் இன்றி பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்கின்றன. இருப்பினும் அந்த நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாக்ஹோமில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story