உலக செய்திகள்

‘அமெரிக்க பெண்ணுடன் தொடர்பு வைக்க இம்ரான்கான் விருப்பம் தெரிவித்தார்’ - டி.வி. பிரபலம் வெளியிட்ட தகவலால் புதிய பரபரப்பு + "||" + Imran Khan wishes to make contact with American woman - information published by the popular New exciting

‘அமெரிக்க பெண்ணுடன் தொடர்பு வைக்க இம்ரான்கான் விருப்பம் தெரிவித்தார்’ - டி.வி. பிரபலம் வெளியிட்ட தகவலால் புதிய பரபரப்பு

‘அமெரிக்க பெண்ணுடன் தொடர்பு வைக்க இம்ரான்கான் விருப்பம் தெரிவித்தார்’ - டி.வி. பிரபலம் வெளியிட்ட தகவலால் புதிய பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் மந்திரி மீது செக்ஸ் புகார் கூறிய அமெரிக்க பெண்ணுடன் தொடர்பு வைக்க இம்ரான்கான் விருப்பம் தெரிவித்ததாக டி.வி. பிரபலம் வெளியிட்ட தகவல் புதிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் மீது பாலியல் புகார் கூறிய அமெரிக்க பெண்ணுடன், இம்ரான்கான் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பினார் என்ற தகவலை டி.வி. பிரபலம் அம்பலப்படுத்தி உள்ளார். இது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தள பதிவுகளால் பிரபலமானவர், அமெரிக்க பெண்ணான சிந்தியா ரிச்சி.

இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோ குறித்து டுவிட்டரில் வெளியிட்ட அவதூறு பதிவு, அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்பாக அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில் அவர் 2011-ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக், தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அத்துடன் அவர் விடவில்லை.

இஸ்லாமாபாத்தில் உள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி மாளிகையில் வைத்து, தன்னிடம் உடல்ரீதியில் தொடர்பு கொண்டதாக பெனாசிர் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி மீதும், முன்னாள் மந்திரியான மகதூம் சகாபுதீன் மீதும் குற்றம் சாட்டினார். தன்னை பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்கள் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த புகார் பாகிஸ்தானில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான்கான் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இந்த பாலியல் புகாரும், அமெரிக்க பெண்ணான சிந்தியா ரிச்சியுடன் தொடர்புடையது என்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது.

இந்த புகாரை சிந்தியா ரிச்சி நேரடியாக கூற வில்லை. அதே நேரத்தில் இந்த புகாரை அவர் யாரிடம் கூறினாரோ, அவரே வெளியே சொல்லி பகிரங்கப்படுத்தி உள்ளார்.

அவர் இந்தப் புகாரை தனது நண்பரான பாகிஸ்தான் டி.வி. தொகுப்பாளர் அலி சலீமிடம் கூறி இருக்கிறார்.

இதுபற்றி இப்போது அலி சலீம் என்ற பேகம் நவாசிஷ் அலி கூறி இருப்பதாவது:-

சிந்தியா ரிச்சி ஒரு காலத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அப்போது நானும் அவரும் ஒரே அறையில் இருந்தோம். அவர் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

அப்போது அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார் என கூறினார்.

அதே நேரத்தில் முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் தன்னை பலாத்காரம் செய்தார் என்பது பற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று அவர் கூறினார்.

இதை அலி சலீம் அம்பலப்படுத்தி இருப்பது பாகிஸ்தானில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் இணைந்து பிரம்மாண்ட பேரணி நடத்தின.
2. இராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் நவாஸ் செரீபுக்கு இந்தியா உதவுகிறது -பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு
'இராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளில்' முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு இந்தியா உதவுகிறது என்று பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டி உள்ளார்.
3. போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு: மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் கைது
போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
4. பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பொதுஇடத்தில் தூக்கிலிடுவது - ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனை - இம்ரான்கான்
பாலியல் வன்கொடுமை சம்பங்களில் ஈடுபடுபவர்களைப் பொதுஇடத்தில் தூக்கிலிடுவது அல்லது ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனையாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார்.
5. திருவண்ணாமலையில், அமெரிக்க பெண்ணை வீடுபுகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் - பொதுமக்கள் திரண்டு கை, கால்களை கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு
திருவண்ணாமலையில் அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரை அங்கிருந்தவர்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.