உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 8 Jun 2020 10:57 PM GMT (Updated: 8 Jun 2020 10:57 PM GMT)

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டி உள்ளது.

மாஸ்கோ,

சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பரில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 6 மாத காலத்தில் இந்த தொற்று உலகமெங்கும் கால் பதித்துள்ளது. அந்த வகையில் உலகமெங்கும் இந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்று 70 லட்சத்தை தாண்டி விட்டது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா தரவு மையம், நேற்று மதிய நிலவரப்படி உலகமெங்கும் 70 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 19 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், பிரேசிலில் 6 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கும், ரஷியாவில் 4 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் கூடுதலானோருக்கும் இந்த தொற்று பாதிப்பு உள்ளதாக அந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Next Story