உலக செய்திகள்

நியூசிலாந்து புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை + "||" + New Zealand no New comer has a corona infection

நியூசிலாந்து புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை

நியூசிலாந்து புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை
நியூசிலாந்து நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்திய, முதல் நாளான நேற்று ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

* சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹீயின் மகன் லீ ஜே யாங். இவர் மீது அங்கு கணக்கு மோசடி, பங்கு மோசடி புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார்களின் கீழ் அவரை கைது செய்வதற்கு பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று சியோல் நகர கோர்ட்டில் அரசு தரப்பு வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். அதை கோர்ட்டு நிராகரித்து விட்டது. ஆனாலும் அவர் மீதான விசாரணை தொடரும் என அரசு தரப்பு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

* இங்கிலாந்து நாட்டில் அனைத்து ஆரம்ப பள்ளி மாணவர்களையும் பள்ளிக்கு திரும்ப வரவழைக்கும் திட்டத்தை போரிஸ் ஜான்சன் அரசு கைவிடும் என தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, சுகாதார மந்திரி மேத் ஹான்காக் செப்டம்பர் மாதம் வரையில் இங்கிலாந்தில் உயர்நிலைப்பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.

* உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் அது இல்லை. அதை அப்படியே தொடர வைக்கிற விதத்தில் அங்கு வர உள்ள சீசனில் நடத்த இருந்த 35 ஆராய்ச்சி திட்டங்களில் 23-ஐ கைவிடுவதாக அண்டார்டிகா நியூசிலாந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

* சீனாவில் கார்களுக்கு பேட்டரி தயாரிக்கிற கேட்டில் நிறுவனம், 12 லட்சம் மைல்கள் செல்லத்தக்க விதத்தில் ஆயுள்காலம் கொண்ட பேட்டரியை தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளது. பொதுவாக மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் கார் பேட்டரி 60 ஆயிரம் முதல் 1½ லட்சம் மைல்கள் வரை செல்வதற்குத்தான் உத்தரவாதம் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

* கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ள நியூசிலாந்து நாட்டில், முதல் நாளான நேற்று ஒருவருக்கு கூட புதிதாக தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து மசூதிகளில் 51 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிக்கு சாகும்வரை சிறைத்தண்டனை - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
நியூசிலாந்து மசூதிகளில் 51 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அந்த நாட்டு கோர்ட்டு நேற்று வழங்கியது.
2. 2 மசூதிகளில் தொழுகையின் போது தாக்குதல் நடத்தியவனுக்கு நியூசிலாந்தின் அதிகபட்ச தண்டனை
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டாரண்டுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
3. மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் தள்ளிவைப்பு
செப்.19 ஆம் தேதி நடைபெற இருந்த நியூசிலாந்து பொதுத்தேர்தல் கொரோனா அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
4. நியூசிலாந்தில் மீண்டும் வைரஸ் பரவியது எப்படி? - 102 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று உறுதி
நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவியது எப்படி என்பது குறித்து அந்த நாட்டு அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
5. நியூசிலாந்துக்கு சென்று விளையாட தயாராகும் 4 அணிகள்
நியூசிலாந்துக்கு சென்று 4 அணிகள் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளன.