உலகைச் சுற்றி.....


உலகைச் சுற்றி.....
x
தினத்தந்தி 11 Jun 2020 10:30 PM GMT (Updated: 11 Jun 2020 7:09 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த மகன் டிரம்ப் ஜூனியர், தனது மகனுடன் மங்கோலியாவுக்கு வேட்டை பயணம் சென்றிருந்தார்.

உலகைச் சுற்றி.....

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மூத்த மகன் டிரம்ப் ஜூனியர், தனது மகனுடன் மங்கோலியாவுக்கு வேட்டை பயணம் சென்றிருந்தார். இந்த வகையில் அமெரிக்க மக்களின் வரிப்பணம் 75 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.56 லட்சம்) செலவாகி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதி, ரகசிய சேவை போலீஸ் பாதுகாப்புக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

* இங்கிலாந்து நாட்டில் வடக்கு லண்டன் பகுதியில் உள்ள ஹாக்னி சாலையில், ஒரு ஆண், ஒரு பெண் என 2 போலீஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டார்கள். இதை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலானது. இந்த தாக்குதலில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உள்துறை மந்திரி பிரித்தி பட்டேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* பெல்ஜியம் இளவரசர் ஜோசிம், ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ஊரங்கு விதிமுறைகளை மீறி ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விருந்தில் கலந்துகொண்டபின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் ஸ்பெயினில் ஊரடங்கு விதி மீறிய குற்றத்துக்காக அவருக்கு 11 ஆயிரத்து 800 டாலர் (சுமார் ரூ.9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

* பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் உள்ள இசை மண்டபத்தில், இங்கிலாந்து கலைஞர் பாங்க்சியின் கலைப்படைப்பு கடந்த ஆண்டு திருடப்பட்டு விட்டது. இந்த கலைப்படைப்பு, ஒரு இளம்பெண்ணின் துக்ககரமான வெளிப்பாட்டை சித்தரிப்பதாகும். இந்த கலைப்படைப்பு, இப்போது இத்தாலி நாட்டில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எப்படி அங்கு சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

* ஆப்கானிஸ்தானில் சமாங்கன் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் பலியாகினர். இன்னும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற விபத்துக்கள் அங்கு நேரிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

* அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலையின் தலை துண்டிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மியாமியிலும் அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வந்தடைந்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அமெரிக்காவை கண்டறிந்தவர் என்ற சிறப்பும் இவருக்கு இருக்கிறது.

Next Story