உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 8வது இடம்
உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கையில் இந்தியா 8வது இடம் பிடித்து உள்ளது.
நியூயார்க்,
உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளின் வரிசையில், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 3,95,048 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,13,831 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,68,269 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 375 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 12,948 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் 87 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உள்ளது. 4.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் 1 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். இதனால் அந்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, பிரேசில் (49,090), இங்கிலாந்து (42,461), ஸ்பெயின் (28,315), இத்தாலி (34,561), மெக்சிகோ (20,394), பிரான்ஸ் (29,617) ஆகிய நாடுகள் இந்த வரிசையில் உள்ளன. இதனை தொடர்ந்து உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கையில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story