உலக செய்திகள்

ஜப்பான் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; பிரதமர் ஷின்ஜோ அபே விருப்பம் + "||" + Reform of Japan's constitution; Prime Minister Shinzo Abe

ஜப்பான் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; பிரதமர் ஷின்ஜோ அபே விருப்பம்

ஜப்பான் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; பிரதமர் ஷின்ஜோ அபே விருப்பம்
ஜப்பான் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே விருப்பம் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ,

ஜப்பானில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பு இரண்டாம் உலகப்போருக்கு பின் இயற்றப்பட்டதாகும். இந்த அரசியலமைப்பின் 9வது பிரிவின்படி அந்த நாட்டின் ராணுவத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசியலமைப்பு சட்டத்தில் சீர்திருத்தம் செய்து ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஷின்ஜோ அபேயின் பதவி காலம் முடிய இருக்கும் நிலையில் அதற்குள் அரசியலமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமராக எனக்கு ஒரு வருடம் மூன்று மாதங்கள் உள்ளன. இந்தக் காலக்கெடுவுக்கு முன்பாக அரசியலமைப்பில் சீர் திருத்தம் செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த நான் விரும்புகிறேன்” கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு
ஜப்பானின் தெற்கு மாகாணங்களில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது 60 ஆக அதிகரித்துள்ளது
2. லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது
3. ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.
4. ஜப்பானில் அமெரிக்க விமானப் படைத்தளத்தில் பயங்கர தீ விபத்து
ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
5. ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு
ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.