உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 போலீஸ் அதிகாரிகள் பலி + "||" + Terrorists attack police station in Afghanistan

ஆப்கானிஸ்தானில் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 போலீஸ் அதிகாரிகள் பலி

ஆப்கானிஸ்தானில் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 போலீஸ் அதிகாரிகள் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் தலீபான் பயங்கரவாதிகள் அரசுடன் ஒத்துழைக்காமல் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு மாகாணமான பக்லானில் புல்-யு-குமாரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் போலீஸ் நிலையத்தை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் பலியாகினர்.10-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். அதே சமயம் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் - போலீஸ் சூப்பிரண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
2. ஆப்கானிஸ்தான் அரசு- தலீபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது
ஆப்கானிஸ்தானின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது
3. ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
4. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்
ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
5. ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலியானார்கள்.