உலக செய்திகள்

ஜப்பானில் அமெரிக்க விமானப் படைத்தளத்தில் பயங்கர தீ விபத்து + "||" + Fire Breaks Out at Hazmat Facility at US Air Base on Japan's Okinawa

ஜப்பானில் அமெரிக்க விமானப் படைத்தளத்தில் பயங்கர தீ விபத்து

ஜப்பானில் அமெரிக்க விமானப் படைத்தளத்தில் பயங்கர தீ விபத்து
ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டோக்கியோ, 

ஜப்பானின் ஒக்கினாவா மாகாணத்தில் உள்ள கதினாவ நகரில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய விமானப்படை தளம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமானப்படைத் தளத்தில் 25 ஆயிரத்து 800 அமெரிக்க வீரர்களும், அவர்களது குடும்பத்தினர் 19,000 பேரும் உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று காலை இந்த விமானப்படை தளத்தில் திடீர் தீ விபத்து நேரிட்டது. வெடிபொருட்கள் உள்ளிட்டவை சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்கில் தீ பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் விமானப் படைத்தளத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

 இதையடுத்து விமானப் படை தளத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு
ஜப்பானின் தெற்கு மாகாணங்களில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை தற்போது 60 ஆக அதிகரித்துள்ளது
2. லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
இந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது
3. ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.
4. ஜப்பான் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; பிரதமர் ஷின்ஜோ அபே விருப்பம்
ஜப்பான் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே விருப்பம் தெரிவித்துள்ளார்.
5. ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு
ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.