உலக செய்திகள்

லடாக் மோதலில் எங்கள் நாட்டு வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை- சீனா சொல்கிறது + "||" + China terms reports of 40 PLA troops killed in Galwan clash as 'fake news'

லடாக் மோதலில் எங்கள் நாட்டு வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை- சீனா சொல்கிறது

லடாக் மோதலில்  எங்கள் நாட்டு வீரர்கள் 40  பேர் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை- சீனா சொல்கிறது
லடாக் மோதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை என்று சீனா தெரிவித்துள்ளது
பெய்ஜிங்,

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் திங்கட்கிழமை இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

சீனா தரப்பில் 40-க்கும் (உயிரிழப்பு மற்றும் காயம்) மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் உள்படப் பல நாட்டின் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே. சிங், ‘‘நாம் 20 ராணுவ வீரர்களை இழந்திருக்கும்போது, இரண்டு மடங்கிற்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்’’ என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில்,  சீனா வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இது தொடர்பாக கூறியதாவது:- ‘‘இந்தியா - சீனா ராணுவ மட்டத்திலும்,  தூதரக மட்டத்திலும் இருதரப்பு பிரச்சினையைத் தீர்த்துக்கொள்கின்றன. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில்  40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அது பொய்யான தகவல் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்றார்.  ஆனால் இது குறித்து விரிவாக எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. 

ஜூன் 15 ஆம் தேதி இரு தரப்பு ராணுவத்திற்கும் பயங்கர மோதல் வெடித்தது. இந்த சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில்,  சீனா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22% அதிகம் - மத்திய அரசு தகவல்
கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா தைவானுடன் நெருக்கம் காட்டி வரும் அமெரிக்காவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
3. சீனாவில் நூடுல்ஸ் உணவு சாப்பிட்டஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி
சீனாவில் பிரீசரில் பாதுகாக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
4. முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
5. பார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்
சீன உயிரியல் பூங்கா ஒன்றில் பார்வையாளர்கள் கண்களுக்கு முன்பாகவே, பூங்கா காப்பாளர் ஒருவரை கரடிகள் கடித்துக் குதறி தின்ற பயங்கரம் நிகழ்ந்தது.