எட்டு மாத குழந்தை ஒன்றை நீச்சல் குளத்துக்குள் தூக்கி எறியும் வீடியோ 7.5 கோடி பேர் பார்த்து ரசித்தனர்


எட்டு மாத குழந்தை ஒன்றை நீச்சல் குளத்துக்குள் தூக்கி எறியும் வீடியோ 7.5 கோடி பேர் பார்த்து ரசித்தனர்
x
தினத்தந்தி 26 Jun 2020 5:59 AM GMT (Updated: 26 Jun 2020 5:59 AM GMT)

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் எட்டு மாத குழந்தை ஒன்றை நீச்சல் குளத்துக்குள் தூக்கி எறியும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் எட்டு மாத குழந்தை ஒன்றை நீச்சல் குளத்துக்குள் தூக்கி எறியும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் ஒரு பெண் நீச்சல் பயிற்சியாளர் எட்டு மாதக் குழந்தை ஒன்றை தண்ணீருக்குள் தூக்கி எறிகிறார். பக்கத்தில் நிற்பவர்கள் பதறுவார்கள் என்று பார்த்தால், வீடியோவின் பின்னணியில் அவர்கள் உற்சாகக் குரல் எழுப்புவதைக் கேட்க முடிகிறது.அந்த குழந்தை தண்ணீருக்குள் விழுந்து மூழ்கியதும், அந்த பயிற்சியாளர் தண்ணிருக்குள் இறங்குகிறார். இறங்கிய அவர் குழந்தையை தூக்க பாய்வார் என்று பார்த்தால், அவரோ பேசாமல் நிற்கிறார்.

சில விநாடிகளுக்குப் பிறகு தண்ணீருக்குள் மூழ்கிய குழந்தை தானாக தண்ணீர் பரப்புக்கு மேலே வருகிறது.அது தத்தக்கா பித்தக்காவென கை கால்களை அடிக்க, அப்புறம் அதை வாரி எடுத்து அணைத்துக்கொள்கிறார் அந்த பெண்.இது என்ன பைத்தியக்காரத்தனமான வீடியோ என்று பார்த்தால், அந்த வீடியோவை பதிவேற்றம் செய்தவரே அந்த குழந்தையின் தாய்தான். அந்த குழந்தையின் பெயர் ஆலிவர். அதன் தாய் கிறிஸ்டா மேயர்  (27)

கிறிஸ்டாவை  கேட்டால், பிற்காலத்தில் குழந்தை தண்ணீருக்குள் விழுந்துவிட்டால், தப்பிப்பதற்கு நீச்சல் குளத்தில் முறையான பயிற்சியாளரை வைத்து பயிற்சி கொடுக்கிறார்களாம்.இந்த வீடியோ, சுமார் 7.5 கோடி முறை பார்க்கப்பட்ட நிலையில், கிறிஸ்டா கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறார்.

குழந்தையை இப்படி தண்ணீருக்குள் வீசி எறிந்ததற்காக அவரை கன்னாபின்னாவென்று பலர் திட்டியுள்ளதோடு, சிலர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்களாம். பிற்காலத்தில் குழந்தை கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகலாம் என எச்சரிக்கிறார்கள் சிலர்.இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ஆலிவரை தண்ணீருக்குள் தூக்கி எறிவது அவரது நெருங்கிய உறவினரான பெண் ஒருவர்தானாம்!    


Next Story