உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு-அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக போராட்டம் + "||" + US: A demonstration was staged against China outside Chinese Consulate in Chicago,

இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு-அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக போராட்டம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு-அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக போராட்டம்
அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் முன்பாக பதாகைகளை ஏந்தியபடி திரண்ட போராட்டக்காரர்கள் சீனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீன தூதரகம் முன்பு இன்று சீனாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.  அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதோடு,  வியட்நாம், தைவான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதாகவும் தங்கள் பலத்தை காட்டி அனைத்து நாடுகளையும் மிரட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனா மீது குற்றம் சாட்டினர். 

ஏற்கனவே, கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், தென் சீனக்கடல் விவகாரம், இந்தியாவுடனான லடாக் எல்லை பிரச்சினை உள்ளிட்டவைகள் சீனாவுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பு
ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளிநாட்டு விசா கட்டுப்பாடு ரத்து என டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
2. சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சென்னையின் 15 மண்டலங்களில் 15,814 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை
இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று காணொலி மூலம் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது
கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 29, 429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது.
5. உலகளவில் கொரோனா பாதிப்பு 1,34,46,431 ஆக அதிகரிப்பு; அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 65 ஆயிரத்தை கடந்தது
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,46,431 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 65 ஆயிரத்தை கடந்தது.