பிரேசிலில் அதிபர் மாளிகைக்கு அருகே பேருந்துக்கு தீ வைப்பு


பிரேசிலில் அதிபர் மாளிகைக்கு அருகே பேருந்துக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 7:59 PM GMT (Updated: 26 Jun 2020 7:59 PM GMT)

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது.

பிரேசிலியா,

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோ கொரோனா வைரசை சரியாக கையாளவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் அதிபர் ஜெயிர் போல்சனரோவினா கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அதிபர் மாளிகை முன்பு தனிநபர் ஒருவர் போராட்டம் நடத்தினார். அப்போது அந்த நபர் அதிபர் மாளிகை அருகே சென்று கொண்டிருந்த பஸ்சை திடீரென வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பஸ்சில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பஸ்சுக்கு தீ வைத்து நபரை உடனடியாக மடக்கிப் பிடித்தனர். அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர்.

அந்த நபர் பஸ்சுக்கு தீ வைத்த உடனேயே பயணிகள் வெளியேறியதால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;

Next Story