உலக செய்திகள்

ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம்:சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் அமெரிக்கா வர தடை + "||" + US imposes visa restrictions on Chinese Communist Party officials over Hong Kong national security law

ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம்:சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் அமெரிக்கா வர தடை

ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம்:சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் அமெரிக்கா வர தடை
ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாஷிங்டன்

 ஹாங்காங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய சீனாவின் ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்கா வர விசா வழங்கப்படாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். 

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய மைக் பாம்பியோ ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியை தண்டிக்கப் போவதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்திருந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சீனா- இங்கிலாந்து கூட்டு பிரகடனத்தில் ஹாங்காங்கின் இறையாண்மை பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்த சீனா, தற்போது மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது.  ஜனநாயக ரீதியான போராட்டம் நடத்துவோரைக் கைது செய்து அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் விசா கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. லடாக் எல்லையில் சீன படைகள் பின்வாங்கியது தற்காலிக கூடாரங்கள் கட்டுமானங்கள் அகற்றப்பட்டது
லடாக் எல்லையில் சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3. அமெரிக்காவில் ஒரே நாளில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி: டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி நடப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
5. "பிரதமரின் பயணம் வீரர்களுக்கு உத்வேகத்தை தரும்" - காங்கிரஸ் கட்சி
பிரதமர் மோடியின் லே பயணம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும் என்றும் அவர்களை ஒருங்கிணைக்க உதவும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.