அமெரிக்காவில் உள்ள நினைவுச்சின்னங்கள், சிலைகளை பாதுகாக்க புதிய சட்டம்- டொனால்டு டிரம்ப்


அமெரிக்காவில் உள்ள நினைவுச்சின்னங்கள், சிலைகளை பாதுகாக்க புதிய சட்டம்- டொனால்டு டிரம்ப்
x

அமெரிக்காவில் உள்ள நினைவுச்சின்னங்கள், சிலைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய வலுவான உத்தரவில் கையெழுத்திட்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்

கறுப்பின அமெரிக்கரான ஜார்ஜ் பிளாயிட் போலீசாரின் விசாரணையின்போது கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுதும் வெடித்த போராட்டத்தில் பல முக்கிய தலைவர்களின்  நினைவுச் சின்னங்களும், சிலைகளும் சேதப்படுத்தபட்டன.

இந்நிலையில் சேதப்படுத்துபவர்களுக்கு நீண்ட கால சிறை உள்ளிட்ட தண்டனைகளை விதிக்கும் வகையில் புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிலைகளை சேதப்படுத்துபவர்களுக்கு அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறை உள்ளிட்ட தண்டனைகளை விதிக்கும் வகையிலான சட்டம் 2013 முதல் அமலில் உள்ள போதும் புதிய உத்தரவு பல்வெறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் வகையில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Next Story