உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது + "||" + The number of corona cases in Pakistan has exceeded 2 lakhs

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியதாக பாகிஸ்தான் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து 955 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 83 பேர் பலியாகினர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் 2 ஆயிரத்து 805 பேர் ஆஸ்பத்திரிகளில் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 ஆயிரத்து 624 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் 78 ஆயிரத்து 261 பேரும், பஞ்சாபில் 74 ஆயிரத்து 202 பேரும், கைபர்-பலுசிஸ்தானில் 25 ஆயிரத்து 380 பேரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் 12 ஆயிரத்து 395 பேரும், பலுசிஸ்தானில் 10 ஆயிரத்து 261 பேரும், ஜில்ஜித் பலுசிஸ்தானில் ஆயிரத்து 423 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆயிரத்து 27 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் குணம் அடைந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் இருவருக்கு கொரோனா !
சீனாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த சிலருக்கு மீண்டும் அந்நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்
பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டுவிட்டரில், “பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
3. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா
பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
5. சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் கலந்து கொண்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...