கொரோனா பாதிப்பு: மிக மோசமான தாக்கம் இனி தான் வர உள்ளது- உலக சுகாதார அமைப்பு


கொரோனா பாதிப்பு: மிக மோசமான தாக்கம் இனி தான் வர உள்ளது- உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 30 Jun 2020 3:09 AM GMT (Updated: 30 Jun 2020 3:09 AM GMT)

கொரோனா வைரசின் மிக மோசமான தாக்கம் இனி தான் வர இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா

சீனா உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பல வியாபித்து ஆறு மாதங்கள் கடந்து.  இதனால்  ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.5 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த  நிலையில், இதன் மிக மோசமான தாக்கம் இனி தான் வர இருப்பதாக  உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-

தற்போதைய சூழலில் அரசாங்கங்கள் சரியான கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும். 

உலகின் பாதி அளவுக்கான கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் கொரோனா பரவல் அமெரிக்காவில் வேகமெடுத்து வருகிறது.கொரோனா வைரஸ் பாதிப்பு தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.நாம் அனைவரும் நம் வாழ்க்கையை பழையபடி தொடர விரும்புகிறோம். ஆனால் கடினமான உண்மை என்னவென்றால், இது முடிவடைவதற்கான சூழல் தற்போது அருகில் இல்லை. அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தத்தளித்து வந்தாலும், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உறுதியான நடவடிக்கைகளால் மீண்டுள்ளன என கூறி உள்ளார்


Next Story