மெக்சிகோவில் அதிசயம் கொரோனா வைரஸ் வடிவில் பெய்த பனிக்கட்டி மழை படங்கள்


மெக்சிகோவில் அதிசயம் கொரோனா வைரஸ் வடிவில் பெய்த பனிக்கட்டி மழை படங்கள்
x
தினத்தந்தி 30 Jun 2020 7:52 AM GMT (Updated: 30 Jun 2020 7:52 AM GMT)

மெக்சிகோவில் அதிசயம் கொரோனா வைரஸ் வடிவில் முள்ளுமுள்ளாக பெய்த பனிக்கட்டி மழை படங்கள்

பீஜிங்

கொரோனா வைரஸ் வடிவிலான ஆலங்கட்டி மழை மெக்சிகோவில்  பெய்து நகர மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மெக்சிகோவின் நியூவோ லியோன் மாநிலத்தில் உள்ள நகராட்சி மான்டிமோரெலோஸில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதில்  விழுந்த பனிகட்டியின் படங்கள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன அந்த படங்கள் பனிக்கட்டி கூர்முனைகளால் வடிவமைக்கப்பட்ட பெரிய ஆலங்கட்டி கற்களைப்போல் உள்ளதை காட்டுகின்றன, இது கொரோனா வைரஸ் வடிவத்தை ஒத்ததாக இருக்கிறது.



தகவல்களின்படி, உள்ளூர்வாசிகள் இந்த நிகழ்வை 'கடவுளின் செயல்' என்று கூறினர். சுவாரஸ்யமாக, யாரோ ஒருவர் "கொரோனா வைரஸ் வடிவ" ஆலங்கட்டி கற்களின் படங்களை பகிர்ந்துள்ளார், பின்னர் இதுபோன்ற படங்கள் சமூக ஊடகங்களில் உலகம் முழுவதும் இருந்து வரத் தொடங்கின.
 
ஆலங்கட்டிகள்  இந்த வடிவில் பெய்வது ஒரு பொதுவானது என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறியதாக கூறப்படுகிறது. போல் கூர்மையான வெளிப்புறத்துடன் காணப்படுவதைக் காணமுடிகிறது.

Next Story