59 செயலிகளுக்கு தடை இந்தியா தடை விதிப்பு: சீனாவின் கருத்து என்ன?


59 செயலிகளுக்கு தடை இந்தியா தடை விதிப்பு: சீனாவின் கருத்து என்ன?
x
தினத்தந்தி 30 Jun 2020 8:47 AM GMT (Updated: 30 Jun 2020 8:47 AM GMT)

டிக் டாக் உள்பட சீனா நாட்டைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது.

பெய்ஜிங்,

லடாக் எல்லையில் நடந்த மோதலையடுத்து இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷமும் இந்தியாவில் எழுந்து வருகிறது.  அதேவேளையில், தொழில்நுட்ப துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் சீன நாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலும் மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ளன. 

குறிப்பாக செல்போன் செயலிகளாக டிக் டாக், ஹலோ போன்றவை இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்களைக் கொண்டுள்ளது. சீன நிறுவனங்களான இவை, பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்ததால், சீன செயலிகளுக்கு  தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. 

இதன்படி சீனாவின் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.  இது குறித்து  ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய, சீனாவின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹாவ் லிஜியான், “நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

Next Story