உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை உயரக்கூடும்- உயர் சுகாதார நிபுணர் + "||" + US Could Hit 100,000 New COVID-19 Cases A Day, Warns Top Health Expert

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை உயரக்கூடும்- உயர் சுகாதார நிபுணர்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை உயரக்கூடும்- உயர் சுகாதார நிபுணர்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு மடங்கு வரை உயரக்கூடும் என உயர் சுகாதார நிபுணர் எச்சரித்து உள்ளார்.
வாஷிங்டன்: 

தொற்றுநோயை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளும்,பொதுமக்களும் எடுக்கத் தவறினால், புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு மடங்கு வரை அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் உயர் சுகாதார நிபுணர் எச்சரித்து உள்ளார்.

உலகிலேயே 26 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மிகபாதிப்படைந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

அமெரிக்க தொற்று நோய் நிபுணர் அந்தோனி பாசி ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் முன்னணி உறுப்பினராக உள்ளார்.

அந்தோனி பாசி  கொரோனா தொற்று நோயின் தாக்கம் குறித்து  செனட் குழுவிடம் பேசும் போது கூறியதாவது:- 

அமெரிக்கா தொற்றுநோய் குறித்து "தவறான திசையில்" சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கர்கள் முககவசங்களை அணிந்து கொள்ள வேண்டும். ஊரடக்கு தளர்வில் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும்.

"நான் மிகவும் அக்கறை கொண்டுள்ளேன், என்ன நடக்கிறது என்பதில் எனக்கு திருப்தி இல்லை, ஏனென்றால் நாம் தவறான திசையில் செல்கிறோம்," 

தெற்கு ஹாட்ஸ்பாட்களில் டெக்சாஸ் மற்றும் புளோரிடாவில் புதிய பாதிப்புகள் ஆபத்தாக உள்ளது. தினசரி தேசிய மொத்த பாதிப்புகள் ஒரு நாளைக்கு 40,000 க்கும் அதிகமாகுகிறது, மேலும் நாட்டில் தொற்று பரவலை  தவிர்த்து அவை விரைவாகக் குறைக்கப்பட வேண்டும்.

இப்போது நாம் முழு கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது இதனால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை பாதிப்பு  சென்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

வணிக மற்றும் பொது இடங்களை பாதுகாப்பாக மீண்டும் திறப்பதை உறுதிப்படுத்தும் சில மாநிலங்கள் "சில சோதனைகளைத் தவிர்க்கின்றன.

மதுக்கடைகளில் ஒன்றுகூடுதல், முககவசங்களை அணியாதது, சமூக தொலைதூர வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது உள்ளிட்ட "ஆபத்தான" நடத்தைகளில் ஈடுபட்டுள்ள நாட்டின் இளைஞர்களை அவர் குற்றஞ்சாட்டினார்.

"தனிநபர்களாக தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு சமூக முயற்சியின் ஒரு பகுதியாகவும், நாம் அனைவரும் அதில் ஒரு பங்கை வகிக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை அம்பலப்படுத்திய ஆய்வு
அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கை மிக அதிகம் என ஒரு ஆய்வில் அம்பலமாகி உள்ளது.
2. அதிபரானால் எச்1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வேன்: ஜோ பிடன்
எனது நான் அதிபரானால் எச்.1 பி விசாவுக்கு தடை விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
3. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்து உள்ளது.
4. கொரோனா பாதிப்பு: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1038 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்க-இங்கிலாந்து ஒத்துழைப்பு; ராணி 2-ம் எலிசபெத், டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உலகளாவிய பொருளாதாரங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஜனாதிபதி டிரம்பும், ராணி 2ம் எலிசபெத்தும் ஆலோசனை நடத்தினர்.