உலக செய்திகள்

நேபாள விவகாரம்:ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் சர்மா ஒலி... ராஜினாமாவா? + "||" + Nepal PM Oli Meets President Amid Party Revolt & Calls To Resign; Budget Session Prorogued

நேபாள விவகாரம்:ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் சர்மா ஒலி... ராஜினாமாவா?

நேபாள விவகாரம்:ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் சர்மா ஒலி... ராஜினாமாவா?
இந்தியாவுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
காட்மாண்டு

இந்தியாவின் சில பகுதிகளை தங்கள் சொந்த பிரதேசமாகக் காண்பிப்பதன் மூலம் நாட்டின் வரைபடத்தை மாற்ற மேற்கொண்டு இந்தியாவுடன் எல்லை பிரச்சினையை செய்த நேபாளத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனவும், சொந்த கட்சிக்குள் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக குரல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனென்றால், இன்று அந்நாட்டு தலைநகரான காட்மாண்டுவில் நடைபெற்று வரும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் கே.பி.ஷர்மா ஒலி பங்கேற்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் நேபாளத்தின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியை சந்திக்க சென்று உள்ளார்.

தனக்கு எதிராக சொந்த கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால், ஒருவேளை அவர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேபாளம்: பலுவதாரில் உள்ள பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது; நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் அமர்வை முன்னெடுக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. 

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (என்.சி.பி) நிலைக்குழு உறுப்பினர்களால் பிரதமர் மற்றும் கட்சி இணைத் தலைவர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்யுமாறு ஒலியைக் கேட்டுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ஆசிரியரின் தேர்வுகள்...