உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா + "||" + U.S. sets record for new coronavirus cases, surpassing 55,000

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலக நாடுகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடு அமெரிக்காவே ஆகும்.

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 56 ஆயிரத்தை கடந்தது. இதனால், மொத்த பாதிப்பு 28,36,875 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 679 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 1,31,477 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பிலிருந்து இதுவரை 11.91 லட்சம் பேர் மீண்டுள்ளனர்; 15.14 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அமெரிக்காவில் கொரோனா படிப்படியாக  அதிகரித்துக்கொண்டே செல்வதால்  அந்நாட்டு மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் இந்தியாவில் 56 ஆயிரம் பேர் குணம்: கொரோனா மீட்பு விகிதம் 70.77 சதவீதமாக உயர்வு
ஒரே நாளில் இந்தியாவில் 56 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா மீட்பு விகிதம் 70.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2. மாலத்தீவுக்கு இந்தியா ரூ.3,750 கோடி உதவி - ஜெய்சங்கர் அறிவிப்பு
மாலத்தீவுக்கு இந்தியா ரூ.3,750 கோடி உதவிகள் வழங்குவதாக ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
3. ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று
ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்றும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: அமெரிக்கா
ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...