உலக செய்திகள்

பிரதமர் மோடி லடாக்கில் திடீர் ஆய்வு: சீனா சொல்வது என்ன? + "||" + No party should engage in any action that may escalate the situation at this point:Zhao Lijian,

பிரதமர் மோடி லடாக்கில் திடீர் ஆய்வு: சீனா சொல்வது என்ன?

பிரதமர் மோடி லடாக்கில் திடீர் ஆய்வு: சீனா சொல்வது என்ன?
கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பெய்ஜிங்,

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜுன் 15 ந்தேதி  இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இந்நிலையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் என பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லடாக்  சென்றார். அவருடன் தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன்சென்றார்.  சுமார் 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்ற மோடிக்கு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  கால்வனில் நடந்த வன்முறை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் இராணுவத்தில் இணைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  

இந்த நிலையில், பிரதமர் மோடியின் லடாக் பயணம் குறித்து சீனா  வெளியுறவுத்துறை துறை செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது:-  பதற்றத்தை தணிக்கும் பணியில் இந்தியாவும் சீனாவும் ராணுவ மட்டத்திலும் ராஜாங்க ரீதியிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த நேரத்தில், எந்த ஒரு தரப்பும் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் இந்தியாவில் 56 ஆயிரம் பேர் குணம்: கொரோனா மீட்பு விகிதம் 70.77 சதவீதமாக உயர்வு
ஒரே நாளில் இந்தியாவில் 56 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா மீட்பு விகிதம் 70.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2. மாலத்தீவுக்கு இந்தியா ரூ.3,750 கோடி உதவி - ஜெய்சங்கர் அறிவிப்பு
மாலத்தீவுக்கு இந்தியா ரூ.3,750 கோடி உதவிகள் வழங்குவதாக ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
3. டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்றும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சுதந்திர தின விழா: 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத்தகவல்
சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
5. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்
இந்தியா-சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக முப்படைகள் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...