உலக செய்திகள்

அலுவலக காரில் பெண் ஒருவருடன் உறவு :ஐநாவின் இரண்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு + "||" + UN suspends 2 for suspected involvement in video showing X act in Tel Avi

அலுவலக காரில் பெண் ஒருவருடன் உறவு :ஐநாவின் இரண்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

அலுவலக காரில் பெண் ஒருவருடன் உறவு :ஐநாவின் இரண்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு
அலுவலக காரில் பெண் ஒருவருடன் உறவு கொண்டதாக ஐநாவின் இரண்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
டெல் அவிவ்

இஸ்ரேலில் ஐநாவின் அலுவலகப் பணிகளுக்காக இயங்கிவரும் காரில் பெண் ஒருவருடன் ஐநா ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்ட விவகாரம் தொடர்பாக, அப்போது அந்த காரில் இருந்த இரண்டு ஊழியர்களை ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் ஐ.நா அனுப்பியுள்ளது

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில்இது குறித்து வீடியோ  ஒன்று கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வைரலானது.

யுஎன் என எழுதப்பட்ட அந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பான விசாரணை முடியும் வரை அவர்கள் பணிக்கு வர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மட்டும் ஐ.நா ஊழியர்களுக்கு எதிராக 175 பாலியல் புகார்கள் இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது
இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது.
2. இஸ்ரேல், அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வருகின்றன: பாலஸ்தீன அதிபர் அறிவிப்பு
இஸ்ரேல், அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வர உள்ளதாக பாலஸ்தீன அதிபர் அறிவித்துள்ளார்.
3. இஸ்ரேலில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது: பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமரானார்
இஸ்ரேலில் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமரானதையடுத்து அங்கு நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.
4. முதன் முதலாக கொரோனா தடுப்பு மருந்தை இஸ்ரேல் கண்டு பிடித்தது
கொரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்தை முதன் முதலாக இஸ்ரேல் கண்டு பிடித்து உள்ளது
5. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி - பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர்
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அங்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர் ஆகிறார்.