மாலியில் பயங்கரம்: கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 30 பேர் பலி
மாலியில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.
பமாகோ,
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் அங்கு போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மாலியின் தெற்கு பகுதியில் புர்கினா பாசோ நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள மோப்தி பிராந்தியத்தில் டோகன் எனப்படும் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களுக்குள் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் பலர் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் சற்றும் ஈவிரக்கமின்றி வீடுகளுக்குள் இருந்த பெண்கள் குழந்தைகளையும் வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

Related Tags :
Next Story