உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்வு + "||" + corona virus statistics: Latest data on COVID-19 infections and deaths

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில்  கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது  உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதிலும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் கொரோனாவின் தாக்கத்துக்கு தப்பவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் 2-வது அலை எப்போது ஏற்படுமோ? என்ற அச்சம் நீங்கியபாடில்லை. உலக மக்களின் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது கோரமுகத்தை காட்டிக்கொண்டே வருகிறது.  

தற்போதைய நிலவரப்படி  உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,182,576  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  528,409 ஆக கூடியுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,292,523- ஆக உள்ளது.

உலக அளவில்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்காதான் உள்ளது. அமெரிக்காவில் மட்டும்   2,890,588- பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2-வது இடத்தில் பிரேசிலும் (1,543,341),  3-ஆம் இஅடத்தில் ரஷ்யாவும் (667,883) உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
2. தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா வைரசால் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டியை கொரோனா வார்டில் அனுமதித்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ; சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த பரிதாபம்
திரிபுராவில் குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டியை கொரோனா வார்டில் அனுமதித்ததுடன், அங்கு சிகிச்சை எதுவும் அளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
4. மண்டல, மகரவிளக்கு சீசனுக்குசபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி -கேரள மந்திரி தகவல்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறினார்.
5. கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு
கடலூர் பெண் சர்வேயர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.