உலக செய்திகள்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா + "||" + Pakistan foreign minister Shah Mehmood Qureshi tests Covid-19 positive

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்லமாபாத்,

பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.  தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் சுமார் 2.25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷியும் கொரோனா நோய் தொற்றில் இருந்து தப்பவில்லை.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஷா முகம்மது குரோஷி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து ஷா முகம்மது  குரோஷி தனது டுவிட் பதிவில், “ எனக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன்.  

தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லாவின் கருணையால் நான் வலுவாகவும் தன்னம்பிக்கையுடன் உள்ளேன்.வீட்டில் இருந்தபடியே எனது பணிகளை நான் தொடர்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. போலீசாருக்கு கொரோனா தொற்று: கடையநல்லூர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் கடையநல்லூர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
2. தமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன், குளித்தலை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 62,064 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது.
4. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
5. இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.