கொரோனா தொற்று பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு


கொரோனா தொற்று பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 July 2020 4:11 AM IST (Updated: 5 July 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

உலகஅளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்து 2-வது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது.

பிரேசிலியா,

உலகஅளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்து 2-வது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 223 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்து 39 ஆயிரத்து 81 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அந்த நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று ஆயிரத்து 290 பேர் இறந்துள்ளனர். எனவே பலி எண்ணிக்கை 63 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8 லட்சத்து 68 ஆயிரம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பிரேசிலில் நேற்று முன்தினம் 48 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஆயிரத்து 252 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

Next Story