உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று, மாயமாக போய் விடாது உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது + "||" + Coronavirus infection does not go away, magically

கொரோனா வைரஸ் தொற்று, மாயமாக போய் விடாது உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது

கொரோனா வைரஸ் தொற்று, மாயமாக போய் விடாது உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது
கொரோனா வைரஸ் தொற்று, இந்த நூற்றாண்டின் அதிமுக்கிய சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஜெனீவா,

கொரோனா வைரஸ் தொற்று, இந்த நூற்றாண்டின் அதிமுக்கிய சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதன் பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தரவுகள்படி, நேற்று மதிய நிலவரப்படி கொரோனா பாதிப்பு உலகளவில் 1 கோடியே 11 லட்சம் என்ற எண்ணிக்கையை நோக்கியும், உயிரிழப்பு 5¼ லட்சம் என்ற எண்ணிக்கை தாண்டியும் சென்று கொண்டிருக்கிறது.


அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா, பெரு, சிலி, இங்கிலாந்து, ஸ்பெயின், மெக்சிகோ, இத்தாலி ஆகிய 10 நாடுக்ள மோசமான பாதிப்பை சந்தித்துள்ள நாடுகளாக திகழ்கின்றன. இந்த நாடுகள் கொரோனா பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதார ரீதியிலும் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளன. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தி மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கி வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களும் விழித்துக்கொள்ள வேண்டும். கொரோனா பரவல் தொடர்பான தரவுகள் பொய் இல்லை. கள நிலவரம், பொய் இல்லை. இதுவரை 1 கோடியே 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை இந்த தொற்று தாக்கி உள்ளது. 5¼ லட்சத்துக்கும் அதிகமானோரை பலி கொண்டுள்ளது. அமெரிக்கா மிகுந்த பாதிப்புக்குள்ளான நாடாக விளங்குகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு, பலி பற்றிய தரவுகள் என்ன சொல்கின்றன என்பதை கண்டுகொள்ளாமல் பல நாடுகள் புறக்கணித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த இன்னும் காலம் கடந்து விடவில்லை. நாடுகள் தங்கள் பொருளாதார இழப்புகளில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நல்ல பொருளாதார காரணங்கள் உள்ளன. அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை புறக்கணித்து விட முடியாது. இந்த பிரச்சினை, மாயமாக தொலைந்து போகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தொற்று பரவலில் நடந்தது என்ன? - முதன்முறையாக சீனா அம்பலப்படுத்துகிறது
கொரோனா வைரஸ் தொற்று பரவலில் நடந்தது என்ன என்பது குறித்து முதன்முறையாக சீனா அம்பலப்படுத்துகிறது.
2. கொரோனாவுக்கு எதிராக மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள்: உலக சுகாதார நிறுவனம் அனுமதி; இந்தியா வரவேற்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தொடர உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இது சரியான நடவடிக்கை என இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.