உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 6 July 2020 2:30 AM IST (Updated: 6 July 2020 1:09 AM IST)
t-max-icont-min-icon

உலகைச் சுற்றி...

•அமெரிக்காவைச் சேர்ந்த “ஸ்பெஸ் அட்வென்சர்ஸ்” என்ற தனியார் விண்வெளி நிறுவனம் அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறது. இது தொடர்பாக சுற்றுலாலா பயணிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக “ஸ்பெஸ் அட்வென்சர்ஸ்” நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

•விண்வெளியில் ரஷியாவின் புரோட்டான் ராக்கெட் தூண்டுடன் மோதுவதை தவிர்ப்பதற்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் சுற்றுபாதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

•ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மற்றும் சாபுல் மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

•கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ஒரோமோ என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த பிரபல பாடகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 166 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story