உலக செய்திகள்

4 மாத குழந்தை கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம் + "||" + Surprisingly, the 4-month-old child became a millionaire

4 மாத குழந்தை கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்

4 மாத குழந்தை கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்
நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளது

நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா லவுராய்கிஜி  என்ற பெண் எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார்.இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் லவுரல் என்ற மகள் பிறந்தார்.

இந்நிலையில் லவுரல் தானாகவே தனது திறமையை கொண்டு கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்ற ஆச்சரிய தகவலை அவரின் தாய் லவுரா வெளியிட்டுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராம் இனுபுலியன்சர்  மூலமே குழந்தை கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

இது குறித்து லவுரா தனது பதிவில், இன்ஸ்டாகிராமில் அதற்குள் மிக பிரபலமாகி என் மகள் கோடீஸ்வரர் ஆகி தூதர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.என்னையே அதற்குள் அவர் முந்தி விடுவார் போல் இருக்கிறது, இந்த வயதிலேயே பெரிய வேலை தான் என பதிவிட்டுள்ளார்.

அதாவது லவுரா இன்ஸ்டாகிராமில் மிக பிரபலம் ஆவார், அவரின் மகள் புகைப்படங்களை வைத்து செய்யப்படும் விளம்பரங்களும் அதிகளவில் பகிரப்படும் நிலையிலேயே இந்த அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சன்னி லியோனின் வித்தையை பார்க்க ஆசையா ...! வீடியோவை பாருங்கள்
நடிகை சன்னி லியோன் மேஜிக் செய்து டிக் டாக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.